Wednesday, January 22, 2020

ஞாபகக் கீறல்கள்

மறந்து போன  முகங்களை
தேடிப்  போன தருணங்களில்
மறைந்து நின்று பார்ப்பதிலும்
மனம்  உறைந்துதான்  போகிறது ;

சந்தோஷ நிமிடங்கள்
சலிப்பைத் தருகையில்,
அழுது தீர்த்த வினாடிகளோ
அழுகையே தந்தன.

தண்டிக்கப்படாத தவறுகள்
தவறுவதில்லை
ஞாபகப்படுத்தி நம்மை
நாணப்படுத்துவதை.

மறதி கொண்ட மனிதர்கள்
மகிழ்ச்சியானவர்களே;
குருதியுறையும்
ஞாபகக் கீறல்கள் முன்னே
உறுதிகொண்டவர் யாரோ?

கடந்து போன காலமும்
வலிகளைத் தர மறப்பதில்லை.
காலம்  மருந்தாவது காலமும் நடவாதது ...
உள்நிறைந்த காற்றும் கனக்கிறது
 நெஞ்சம் கனக்கையில்...

இமைகள்
மூடுகையில்
திறக்கின்றன
கனவுகளின் கதவுகள்...



Saturday, September 4, 2010

நாளையவன்

நேற்றை மறந்தவன்
இன்றை இழந்தவன்
என்றும் நாளையவன்..